Friday, March 13, 2009

ஸ்டாப் லாஸ் போடாமல் பங்கு வர்த்தகம் சரிதானா ??

வணக்கம்! பங்கு வணிகத்தில் ஈடுபட்டு இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் குரு திரு சரவணக்குமார் அவர்களில் ஆசியுடன் பங்குவணிகம் பற்றிய எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.


ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் பங்கு வணிகத்தில் நம் நண்பர்கள் அதிகம் பேர் ஈடுபட்டு இருக்கின்றோம். அப்படி கண் தெரியாத குருடரைபோல தவித்த நமக்கு கலங்கரை விளக்கமாக இருந்து நம்மை கரையேற்றியது!!
தமிழில் பங்கு வணிகம் என்ற வலைத்தளமும்,அதன் ஆசிரியரான நம் வழிகாட்டி,நம் குரு திரு சரவணகுமார் அவர்களும்தான்.

தனது வேலை பணிகளுக்கு மத்தியில் நம் அனைவருக்கும் சார்ட் என்றால் என்ன? EMA என்றால் என்ன? SMA என்றால் என்ன ? MACD என்றால் என்ன? STS என்றால் என்ன? மேலும்,சப்போர்ட் லெவல் RESISTANCE லெவல் ,தின வர்த்தக குறிப்புகள் மேலும் வர்த்தகம் செய்வதற்கான அனைத்துவிதமான தகவல்களையும் பொறுமையுடனும்,அக்கறையுடனும் நமக்காக வழங்கி இருக்கிறார் மேலும்,தின வர்த்தகத்திற்கான அவர் கண்டு பிடித்த பிரத்த்யோகமான சில செட் அப் களும் நம் வர்த்தகத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தன. அதில் நாம் பல வெற்றிகளையும் அடைந்து இருக்கின்றோம் .ஆனால்! அதே சமயம் நாம் நமது பழைய இழப்புகளில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. வெற்றிக்கான வழிகளை சொல்லி கொடுத்தவர் நம் பணத்தின் பாதுகாப்புக்கான வழி முறைகளையும் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

அதுதான் ஸ்டாப் லாஸ் போடுவது

ஆனால்? அதை நாம் கடை பிடிக்கிறோமா?அதுதான் இல்லை.ஸ்டாப் லாஸ் என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது. தரிசு நிலமாய் இருந்த நம்மை உழுது ,நீர்பாய்ச்சி,நடவு நட்டு ,உரம் போட்டு விவசாயம் செய்ய பொறுமையுடனும் அக்கறையுடனும் சொல்லி தருகிறார்! நாமும் அதை நன்றாகத்தான் கற்று கொண்டோம்.உழுதோம்,நீர்பாய்ச்சினோம்,நடவு நட்டோம்,உரம் போட்டோம் பயிர் வளரும் நேரத்தில் பாதுகாக்க தவறி விடுகிறோம் பயிர் வளரும் நேரத்தில் ஸ்டாப் லாஸ் எனும் வேலி போட தயங்குகிறோம் .நாம் ஆசையுடன் வளர்த்த பயிரை விலங்குகள் மேய்வதை இதயத்தில் இரத்தம் கசிய வேடிக்கை பார்க்கிறோம் . நன்றாக யோசித்து பார்த்தால் ஸ்டாப் லாஸ் மட்டும் போட்டு இருந்தால்.நாம் எல்லோருமே இன்று வெற்றியாளர்கள்தான்.

ஒரு நாட்டில் ராணுவ செலவு மட்டும் இல்லையெனில் அந்த நாடு கண்டிப்பாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.ஆனால் எல்லா நாடுகளுமே ராணுவத்திற்குத்தான் அதிக செலவு செய்கின்றன.ராணுவ ஆட்சி நடக்கும் நாடாக இருந்தாலும் சரி மக்கள் ஆட்சி செய்யும் நாடும் சரி.ஒரு நாடு பொருளாதாரத்தில் சிறந்து,, பாதுகாப்பு இல்லையெனில்? அது நல்லநாடா ? ஒரு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பு எவ்வளவு அவசியமோ அதேபோல!!
பங்கு வர்த்தகத்திற்கு ஸ்டாப் லாஸ் அவசியம்.

நண்பர்களே! என்ன இவன் ஓவரா அட்வைஸ் பண்ணுறானே அப்படின்னு நினைக்காதிங்க! இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு நானே சொல்லி கொண்டதுதான் சமீபமா நான் ஸ்டாப் லாஸ் போட்டு பெரிய இழப்புகளை தவிர்த்து இருக்கிறேன்.


முதலில் ஸ்டாப் லாஸ் போட்டு அந்த ஸ்டாப் லாஸ் உடைபடுவதை பார்த்து ஜீரணிக்க பழக வேண்டும்.அதுதான் முதல் வெற்றி! அதை சகஜ நிகழ்வாக ஏற்று கொள்ள வேண்டும்.


ராணுவம் இல்லாத நாடு

வேலி இல்லாத பயிர்

பூட்டு இல்லாத வீடு

ஸ்டாப் லாஸ் இல்லாத வர்த்தகம்

எல்லாம் ஒன்றுதான்...

வேடிக்கையாய் சொல்ல வேண்டும் என்றால் ஸ்டாப் லாஸ் போடாமல் வர்த்தகம் செய்வதைவிட அந்த பணத்தை திருப்பதி கோயில் உண்டியலிலோ? பழனி கோயில் உண்டியலிலோ போடுவது சிறந்தது.

4 comments:

Rajkumar said...

வாழ்த்துக்கள் தமிழ் .தமிழ் வாழ்க வாழ்த்தும் அன்பன் ராஜ்குமார்

bala said...

வணக்கம் ,,என்ன சும்மா நெத்தியடியா அடிக்கறீங்க ,,,,,வாழ்த்துக்கள் நச்சுனு இருக்கு ....பாலா

வைகரைதென்றல் said...

வணக்கம்
(நாம் ஆசையுடன் வளர்த்த பயிரை விலங்குகள் மேய்வதை இதயத்தில் இரத்தம் கசிய வேடிக்கை பார்க்கிறோம் . நன்றாக யோசித்து பார்த்தால் ஸ்டாப் லாஸ் மட்டும் போட்டு இருந்தால்.நாம் எல்லோருமே இன்று வெற்றியாளர்கள்தான்.)
(ஸ்டாப் லாஸ் என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது.:):D

(ராணுவம் இல்லாத நாடு
வேலி இல்லாத பயிர்
பூட்டு இல்லாத வீடு
ஸ்டாப் லாஸ் இல்லாத வர்த்தகம்
எல்லாம் ஒன்றுதான்..)

நச்சுனு இருக்கு .

நன்றி தமிழ்

வாழ்த்துக்களுடன்
முருகன்
சென்னை :)

மங்கை said...

//வேடிக்கையாய் சொல்ல வேண்டும் என்றால் ஸ்டாப் லாஸ் போடாமல் வர்த்தகம் செய்வதைவிட அந்த பணத்தை திருப்பதி கோயில் உண்டியலிலோ? பழனி கோயில் உண்டியலிலோ போடுவது சிறந்தது//

இது தான் ஹை லைட்... நல்லா வந்திருக்கு...வாழ்த்துக்கள்