Sunday, April 19, 2009

பொருளாதார நெருக்கடி: வெங்காயமா? வேர்கடலையா?

அதென்ன வெங்காயமா ? வேர்கடலையா ?

தற்பொழுது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெங்காயம் போல் இருந்து நமக்கு கண்ணீர் வரவழைத்துவிட்டு பின்பு ஒன்றுமில்லாமல் மறைந்துவிடுவதா? அல்லது உள்ளே விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டும் வேர்கடலையைப் போன்ற திடமானதா ?என்பதற்குதான் இந்த தலைப்பு.

ஷ்ஷப்பா...... ஒரு தலைப்புக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா ?

வடிவேலு பாணியில் சொன்னால் ”இப்பவே கண்ணகட்டுதே “ ! சரி விஷயத்திற்கு வருவோம்.

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு

இது தான் முதல் தடவையென்றோ, இது தான்

அதிகவீரியம் கொண்டதென்றோ நாம் நினைத்தால் அது தவறு. ஏற்கனவே நாம் பாகிஸ்தனுடன் போரிட்ட 1960 களிலும், ஏன் 1990 களிலும் கூட பொருளாதார நெருக்கடி நம் நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

அப்போதெல்லாம் செய்திபரப்ப இது போன்ற 24 மணிநேர ஊடகங்கள் இல்லை. விளைவுகளும் பெரிதாக உணரப்படவில்லை.

என்ன, தற்பொழுது ஊடகங்கள் உலக நிகழ்வுகளை விளக்குவதால் சாதாரண செய்தி கூட பூதகாரமாகத் தோன்றுகிறது. மற்றபடி வல்லுநர்களைப் பொருத்தவரையில் இந்த நெருக்கடி பத்தோடு ஒன்று பதினொன்று வகையறா தான்.

அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளையும் அங்கு துவங்கிய சரிவு பற்றியும் ஏற்கனவே நிறைய பேசி எழுதியாகிவிட்டதால் அது நமக்கு வேண்டாம்.

நமது நாட்டின் தொழில் வளர்சியின் நிலைபாடு என்ன?

அது எந்த அளவிற்கு நம் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு உதவும் என்பது தான் முக்கியம்.

நமது நாட்டில் உற்ப்பத்தி நிறுவனங்களை பொருத்தமட்டில் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கமும் பல்வேறு வகையான சலுகைகளையும் வரிகுறைப்பு வாயிலாக செயல்படுத்தியுள்ளது. ஆனாலும் நிலைமை சீரடைய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.

2007ம் ஆண்டு நமது நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி 10.9% ஆக இருந்தது அது படிபடியாக குறைந்து தற்போது 1.1% ஆக உள்ளது.

மற்ற நாடுகளைக் கணக்கெடுக்கையில் நமது நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி இன்னும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் பாதகமில்லை. ஆனலும் , இந்த மந்த நிலை நிரந்தரமுமில்லை.

சமீபத்தில், ஒரு பொருளாதார நிபுணர் சொன்ன கருத்து

மிகவும் வியப்பாக இருக்கிறது அதாவது பணவீக்கம் என்பது நமக்கு பிடிக்கும் ஜலதோசம் போன்றது. வரும் பின்பு தானே சரியாகிவிடும் !

பணவீக்க சதவீத புள்ளி விபரமும் அது போல ஏறும் இறங்கும். பின்பு தானே சீரடைந்து விடும்.

அதை கண்டுகொள்ளாமல் விடுவதே உத்தமம்.

இதே முறையே, சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கும் கடைபிடிக்கலாம்! நிலைமையை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கவனித்துக்கொள்ளும்.

இனி இந்த பிரச்சனையை வெங்காயமா ? வேர்கடலையா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

நன்றி : www.rediffmail.com

2 comments:

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway!